ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

15 மில்லியன் ரூபாவிற்கு அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

by Staff Writer 29-08-2022 | 4:20 PM

Colombo (News 1st) யாழ்.தொண்டைமானாறு பாலத்திற்கு அருகில் 15 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் இன்று(29) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 51 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவும் வேனொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மன்னார் பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 32 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.