.webp)
Colombo (News 1st) அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் இன்று(29) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 09ஆம் திகதி மற்றும் அதற்கு பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கிடையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டமை மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனைத் தவிர, மே மாதம் 9ஆம் திகதி மற்றும் அதற்கு பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்ட பல பிரதேச சபைத் தலைவர்கள் சிலரும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகளுக்கு தேவையான ஆரம்பகட்ட தகவல்களை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இன்றைய தினம்(29) பதிவு செய்யவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.