.webp)
Colombo (News 1st) பொலிஸ் சட்டப் பிரிவின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியின் கீழ், பொலிஸ்மா அதிபரினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ருவன் குணசேகர இதற்கு முன்னர் நீதிமன்ற பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளராக பதவி வகித்திருந்தார்.