ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு மகாமான்ய பிரதாபாதிகேஷ்வர விருது

by Staff Writer 28-08-2022 | 5:46 PM

Colombo (News 1st) பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா மகாமான்ய பிரதாபாதிகேஷ்வர விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அஸ்கிரி மகா விகாரையின் அபினந்த விழாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜெனரல் சவேந்திர சில்வா சமய மேம்பாட்டிற்கு ஆற்றிய தேசிய சேவையை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.