உக்ரைனில் இருந்து ரஷ்யா செல்வோருக்கு நிதியுதவி: விளாடிமிர் புதின் அறிவிப்பு

உக்ரைனில் இருந்து ரஷ்யா செல்வோருக்கு நிதியுதவி: விளாடிமிர் புதின் அறிவிப்பு

உக்ரைனில் இருந்து ரஷ்யா செல்வோருக்கு நிதியுதவி: விளாடிமிர் புதின் அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

28 Aug, 2022 | 6:43 pm

Colombo (News 1st) உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 6 மாதங்களைக் கடந்தும், சண்டை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு வரும் மக்களுக்கு நிதியுதவி வழங்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கும் ஆணையில் இன்று அவர் கையெழுத்திட்டுள்ளார். 

ஓய்வூதியம் பெறுவோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட உக்ரைனை விட்டு ரஷ்யாவிற்கு வரும் அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படும் என ரஷ்ய அதிபர் அறிவித்துள்ளார். 

கடந்த பெப்ரவரி 18 முதல் உக்ரைனை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மக்களுக்கு 10,000 ரூபிள் மாதாந்திர ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு உக்ரைனில் பெப்ரவரியில் ரஷ்யாவால் சுதந்திர பிராந்தியங்களாக அங்கீகரிக்கப்பட்ட ரஷ்ய ஆதரவு பிராந்தியங்களான, சுய ஆட்சி நடைபெறும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதியிகளிலிருந்து ரஷ்யா செல்வோருக்கு நிதியுதவி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, உக்ரைன் மக்களுக்கு ரஷ்ய கடவுச்சீட்டுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்