கைதான 9 இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்பரப்பில் கைதான 9 இந்திய மீனவர்கள் விடுதலை

by Bella Dalima 27-08-2022 | 8:03 PM

Colombo (News 1st) SEA OF SRILANKA எனும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மூன்றாவது நாளாகவும் திருகோணமலை நீதவான்  நீதிமன்றத்தில் தொடர் விசாரணைகள் நடைபெற்றன.

இதன்போது, 9 மீனவர்களுக்கும் 10 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 3 வருட சிறைத்தண்டனை விதித்து  நீதவான் ஜனாப் இஸ்மாயில் பயாஸ் ரஸாக் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி முல்லைத்தீவு - திருகோணமலை கடற்பரப்பில் வைத்து நாகை மாவட்டத்தை சேர்ந்த குறித்த 9 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.