மட்டக்களப்பில் இரு குழுக்களிடையே மோதல்; இளைஞர் பலி

மட்டக்களப்பில் இரு குழுக்களிடையே மோதல்; இளைஞர் கொலை

by Bella Dalima 26-08-2022 | 5:44 PM

Colombo (News 1st) மட்டக்களப்பு - வாகனேரியிலுள்ள ஆலயமொன்றில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரதேசத்திலுள்ள ஆலயமொன்றில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தின் இறுதி நாளான நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற சம்பிரதாயங்களின் போது, இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பே உயிரிழப்பிற்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் உடலில் கத்திக்குத்து காயம் இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வாகனேரி - குளத்தமடு பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞரே மோதலில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கைகலப்பின் போது காயமடைந்த இருவர் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.