.webp)
Colombo (News 1st) இலங்கைக்கு பயணிக்க தமது பிரஜைகளுக்கு நோர்வே விதித்திருந்த பயணத் தடையை நீக்கிக்கொண்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட அமைதியின்மை, ஊரடங்கு சட்டம் மற்றும் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால நிலைமையை கருத்திற்கொண்டு கடந்த மே மாதம் 11 ஆம் திகதி நோர்வே பிரஜைகளுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் தற்போதைய நிலைமையில் எதிர்ப்புகள் வரக்கூடும் என எச்சரித்துள்ள நோர்வே அரசாங்கம், அது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு பயணிக்கத் திட்டமிடும் நோர்வே பயணிகளுக்கு, தேவையான மருந்துகளை எடுத்துச்செல்லுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், தங்கும் ஹோட்டல்கள் மற்றும் போக்குவரத்திற்கு போதுமான எரிபொருள் கிடைப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் நோர்வே வௌிவிவகார அமைச்சு தமது பிரஜைகளை கேட்டுக்கொண்டுள்ளது.