அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: ஜோக்கொவிச் விலகல்

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து நோவாக் ஜோக்கொவிச் விலகல்

by Bella Dalima 26-08-2022 | 4:18 PM

செர்பியாவின் பிரபல டென்னிஸ் வீரரான நோவாக் ஜோக்கொவிச் (Novak Djokovic) அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இதனால் ஜோக்கொவிச் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க பகிரங்க தொடரில் விளையாடுவதற்காக இம்முறை தன்னால் நியூயோர்க்கிற்கு பயணிக்க முடியாதது வருத்தமளிப்பதாக  ஜோக்கொவிச் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அவுஸ்திரேலிய பகிரங்க தொடரிலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத காரணத்திற்காக அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.