ரஞ்சன் விரைவில் விடுவிக்கப்படுவார்: ஹரின் ட்வீட்

ரஞ்சன் ராமநாயக்க விரைவில் விடுவிக்கப்படுவார்: ஹரின் பெர்னாண்டோ ட்வீட்

by Bella Dalima 25-08-2022 | 5:23 PM

Colombo (News 1st) சிறைவாசம் அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க நாளை (26) அல்லது 29 ஆம் திகதி திங்கட்கிழமை விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்ப்பதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ட்விட்டர் பதிவொன்றை விடுத்துள்ள அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு அவரும் பல தரப்பினரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிப்பதற்கான செயற்பாடுகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 

Expecting dear brother @RamanayakeR to be released tomorrow (26) or Monday (29) on the request that @nanayakkara77 and I made along with many others to HE President @RW_UNP, I would like to thank @wijerajapakshe who worked tirelessly to make it happen. ecstatic about his release pic.twitter.com/9uPNmtdJFh

— Harin Fernando (@fernandoharin) August 25, 2022