.webp)
Colombo (News 1st) இந்தியாவில் உள்ளதைப் போன்று பொது விநியோக முறையை (Public Distribution) இலங்கை ஏற்றுக்கொண்டு அதனை மாகாண சபைகளின் கீழ் கொண்டுவருவதன் மூலம் பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட முயற்சிக்கலாம் என The Indian Express செய்தி வௌியிட்டுள்ளது .
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தானியங்கள், எரிபொருள், பால் மா, மருந்துகள் என்பன பாதிக்கப்பட்ட தரப்பினரையும் பெரும்பாலான மக்களையும் சென்றடைவது உறுதிப்படுத்தப்படுவதாக The Indian Express செய்தி வௌியிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பொது விநியோக முறையை அறிமுகப்படுத்த இந்தியாவும் சர்வதேச சமூகமும் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது காலத்தின் கட்டாயம் என The Indian Express வௌியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.