.webp)
Colombo (News 1st) அமெரிக்காவில் மாணவர்களின் கல்விக் கடன்களை அதிபர் ஜோ பைடன் இரத்து செய்துள்ளார்.
அமெரிக்காவில் கல்விக் கடன்கள் மூலம் உயர்கல்வி படிப்பைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அவர்களின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு அந்நாட்டு அரசு கல்விக்கடன்களை இரத்து செய்துள்ளது.
அதன்படி, அமெரிக்காவில் ஆண்டிற்கு 1,25,000 டொலருக்கும் குறைவான தனிநபர் வருமானம் கொண்டவர்களுக்கு 10,000 டொலர்கள் வரை கல்விக் கடன் இரத்து செய்யப்படுவதாகவும் மாத வருமானத்தில் 10% ஆக பிடித்தம் செய்யப்பட்ட கல்விக் கடன் இனி 5 சதவீதமாகக் குறைக்கபடும் என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.