.webp)

Colombo (News 1st) நேற்று (23) நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த பெத்தும் கேர்னர், சட்டத்தரணிகள் மூலமாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
இதன்போது, பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குணவெல உத்தரவிட்டதுடன், இந்த வழக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கடந்த ஜூலை 13 ஆம் திகதி பத்தரமுல்லை - பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தியாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
