.webp)
Colombo (News 1st) இலங்கைக்கு நிதி வசதிகளை வழங்குவதற்கு கடன் வழங்கும் தரப்பினரிடமிருந்து போதிய உத்தரவாதம் தேவை என சர்வதேச நாணய நிதியம் (IMF) நேற்று (23) அறிக்கையூடாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
நேற்றிரவு இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச நாணய நிதியக் குழு இன்று கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளது.
நிதியமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் மத்திய வங்கி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் மட்டத்திலான உடன்படிக்கையை எட்ட முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதியைப் பெற வேண்டும்.
டிசம்பர் மாதத்திற்குள் விரிவான கடன் சலுகை திட்டத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதே மத்திய வங்கி ஆளுநரின் நம்பிக்கையாகும்.