MTV Channel தனியார் நிறுவனம் FREESAT உடன் இணைவு

MTV Channel தனியார் நிறுவனம் FREESAT உடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்து

by Bella Dalima 23-08-2022 | 10:47 PM

Colombo (News 1st) MTV Channel தனியார் நிறுவனம் Digital Satellite தொலைக்காட்சி சேவையான FREESAT உடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது  .

அதனூடாக இன்று முதல் சிரச TV, TV1, நியூஸ்ஃபெஸ்ட் மற்றும் சக்தி TV ஆகிய அலைவரிசைகளை பார்வையிடலாம். 

நவீன DVB - S TWO X தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பாகும் Digital Satellite  தொலைக்காட்சி சேவையான FREESAT மூலம் இலவசமாக எமது அலைவரிசைகளை பார்வையிட முடியும்.

MTV செனல் தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுசார தினால் மற்றும் FREESAT-இன் நிறைவேற்று அதிகாரி கமிந்த சமரகோன் ஆகியோர் இன்று இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.