மதுபான போத்தலை திருடியவருக்கு விளக்கமறியல்

ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிலிருந்து வௌிநாட்டு மதுபான போத்தலை திருடிய நபருக்கு விளக்கமறியல்

by Staff Writer 23-08-2022 | 7:49 PM

Colombo (News 1st) ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த போது, அங்கிருந்த வௌிநாட்டு மதுபான போத்தல் ஒன்றை திருடியதாக நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் நாளை (24) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பிலான வழக்கு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த வௌிநாட்டு மதுபான போத்தலொன்றை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.