ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவ சீருடை அணிந்திருந்ததாக கூறப்படும் ஷாலிக ருக்ஷான் கைது

by Staff Writer 23-08-2022 | 7:43 PM

Colombo (News 1st) கொழும்பு கோட்டை வங்கி மாவத்தையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரின் சீருடையை அணிந்திருந்ததாக கூறப்படும் ஷாலிக ருக்ஷான் கொழும்பு வொக்ஸ்ஹோல் வீதியில் இன்று பிற்பகல்  கைது செய்யப்பட்டார்.

நாளை (24) ஆரம்பிக்கப்படவிருந்த போராட்ட மத்திய நிலையத்தின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.