பிலிப்பைன்ஸில் பாடசாலைகளை மீள திறக்க தீர்மானம்

பிலிப்பைன்ஸில் பாடசாலைகளை மீள திறக்க தீர்மானம்

by Staff Writer 22-08-2022 | 4:46 PM

Colombo (News 1st) பிலிப்பைன்ஸில் பாடசாலைகள் மீளத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்பட்டவுள்ளன. 

கொவிட் தொற்றினால் தொடர்ச்சியாக பாதிப்படைந்த நாடுகளுள் பிலிப்பைன்ஸ் அடங்குகின்றது. 

இதனால் அங்குள்ள மாணவர்கள் தொடர்ச்சியாக வீட்டிலிருந்தே கல்வி செயற்பாடுகளை தொடர்ந்தனர்.

பாடசாலை கல்வி இடைநிறுத்தப்பட்டிருப்பது கல்வி செயற்பாடுகளில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.