.webp)
Colombo (News 1st) மாவனெல்ல - உதுவன்கந்த பாறையிலிருந்து வீழ்ந்து பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 27 வயதான மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் 58 பேரை கொண்ட குழுவுடன் ஆய்வொன்றுக்காக உதுவன்கந்த பகுதிக்கு சென்றிருந்த குறித்த மாணவி, இன்று(21) பிற்பகல் பாறையிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது மாவனெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.