உர இறக்குமதிக்கான நிபந்தனைகளை விதித்த உலக வங்கி

உர இறக்குமதிக்கான நிபந்தனைகளை விதித்த உலக வங்கி

by Staff Writer 21-08-2022 | 8:10 PM

Colombo (News 1st) அடுத்த போகத்திற்கான உரத்தை  இறக்குமதி செய்யும் போது ஊழல் மற்றும் மோசடிகளின்றி அதனை முன்னெடுக்க வேண்டும் என உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.

இதன் பிரகாரம் கடுமையான விதிமுறைகளின் கீழ் சர்வதேச விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதாக 'சண்டே டைம்ஸ்' இன்று(21) செய்தி வெளியிட்டுள்ளது.

உலக வங்கியின் வழிகாட்டலின் பிரகாரமே அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

கொள்முதல் செய்கின்ற போது ​​ஒப்பந்தக்காரர்கள் மற்றும் துணை ஒப்பந்தக்காரர்களின் அனைத்து கணக்குகள் மற்றும் ஆவணங்கள் உலக வங்கியின் பிரதிநிதிகளால் கணக்காய்விற்கு உட்படுத்தப்படுகிறது.

கொள்முதல் செயற்பாட்டின் ஊடாக எதிர்வரும் பெரும்போகத்தற்காக 125,000 மெட்ரிக் தொன் யூரியா இறக்குமதி செய்யப்படவுள்ளது.

உலக வங்கியின் அவசர நிதி உதவியில் 110 மில்லியன் அமெரிக்க டொலர், உர இறக்குமதிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.