ஜ.நா பிரதிநிதிகள் யாழ். மேயரை சந்தித்தனர்

by Bella Dalima 20-08-2022 | 7:30 PM

Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு  அலுவலகத்தின் (UNDCO)ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் David Mclachlan-Karr-க்கும்  யாழ்ப்பாண மாநகர சபை மேயருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை நடைபெற்றது.

யாழ். மாநகர சபையில்  நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரும் பங்கேற்றிருந்தார்.

இதன்போது, யாழ்ப்பாண மாநகர சபை மேயர் விசுவலிங்கம் மணிவண்ணன், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு  அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் David Mclachlan-Karr-க்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கினார்.