.webp)

Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று அடுத்த வாரமளவில் நாட்டிற்கு வருகை தர திட்டமிட்டுள்ளது.
ஆகஸ்ட் 24 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிக்கு இடையில் இவர்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
பொருளாதார, கடன் மறுசீரமைப்பு மற்றும் கொள்கைகள் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் மேலும் கலந்துரையாடுவதற்காக இவர்கள் வருகை தரவுள்ளனர்.
