.webp)

Colombo (News 1st) T-56 ரக ரவைகள், கஞ்சா மற்றும் இராணுவ சீருடைக்கு நிகரான ஆடைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், வவுனியா - தேக்கவத்தை பகுதியிலுள்ள விடுதியொன்றில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 30 T-56 ரக ரவைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர் விசேட அதிரடிப்படையிலிருந்து ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்கேநபரிடமிருந்து 850 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த நான்கு சந்தேகநபர்களும் ஏதேனும் திட்டமிட்ட குற்றச்செயலில் ஈடுபடுவதற்கு முற்பட்டனரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
