.webp)

Colombo (News 1st) அலரி மாளிகைக்குள் பிரவேசித்து, அங்குள்ள சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய 50 பேரை அடையாளம் காண்பதற்காக, பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளனர்.
கொழும்பு தெற்கு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களின் புகைப்படங்களும் ஊடகங்களுக்கு வௌியிடப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், அதனை 011 242 18 67 அல்லது 076 347 73 42 அல்லது 1997 எனும் இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
