UNDCO-வின் ஆசிய-பசுபிக் பிராந்திய பணிப்பாளர் யாழ்ப்பாணம் விஜயம்

by Bella Dalima 19-08-2022 | 7:35 PM

Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு  அலுவலகத்தின் (UNDCO) ஆசிய-பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் David Mclachlan-Karr யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை இன்று மேற்கொண்டிருந்தார். 

யாழ். மாவட்ட செயலகத்திற்கு இன்று காலை விஜயம் செய்த அவர், அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனை சந்தித்திருந்தார். 

இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரும் பங்கேற்றிருந்தார். 

தற்போதைய பொருளாதார நெருக்கடி பல்வேறு தரப்பினரின் வாழ்வியலில் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பில் இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது. 

David Mclachlan-Karr கடந்த ஆகஸ்ட் 16 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்ததுடன், பல்வேறு தரப்புகளையும் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.