.webp)
Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
தமக்கு எவ்வித முன்னறிவித்தல்களும் வழங்கப்படாமல், ஒரு சிலரின் அரசியல் இலாபங்களுக்காக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வளாக மாணவர்களின் கோரிக்கை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படும் பட்சத்தில், அது தொடர்பில் ஆராயப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்திலிருந்து 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு பிரிவு மாணவர்களை இன்று காலை 8 மணிக்கு முன்னர் வெளியேறுமாறு பல்கலைக்கழக வளாகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.