பஸ் கட்டணங்களை செலுத்த இலத்திரனியல் அட்டை: முன்னோடித் திட்டம் ஆரம்பம்

பஸ் கட்டணங்களை செலுத்த இலத்திரனியல் அட்டை: முன்னோடித் திட்டம் ஆரம்பம்

பஸ் கட்டணங்களை செலுத்த இலத்திரனியல் அட்டை: முன்னோடித் திட்டம் ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

19 Aug, 2022 | 3:55 pm

Colombo (News 1st) பஸ்களில் பயணிக்கும் போது இலத்திரனியல் அட்டை மூலம் (E-Pay system) பணம் செலுத்தும் முன்னோடித் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் தலைமையில் இந்த நிகழ்வு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. 

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், கலாநிதி நிலன் மிராண்டா, கொட்டாவை மகும்புர மல்டிமோடல் சென்டரிலிருந்து (Multimodal Center) தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலி வரை பயணிக்கும் பேருந்துகளில் இந்த முன்னோடி திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

பயணிகள் பணம் வழங்காமல் இந்த அட்டையை பயன்படுத்துவதன் மூலம் பயணச்சீட்டை பெற்றுக்கொண்டு பஸ்களில் பயணிக்க முடியும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்