டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரராக ஜோ ரூட் பதிவு

டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரராக ஜோ ரூட் பதிவு

டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரராக ஜோ ரூட் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

19 Aug, 2022 | 4:18 pm

Colombo (News 1st) டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரராக இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் ஜோ ரூட் (Joe Root) பதிவாகியுள்ளார். 

32 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள  ​ஜோ ரூட்  8 சதங்களுடன் 1752 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இங்கிலாந்தின் Jonny Bairstow 6 சதங்களுடன் 1218 ஓட்டங்களைக் குவித்து இரண்டாமிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார். 

பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அஸாம் 953 ஓட்டங்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளார். 

இலங்கை அணியின் திமுத் கருணாரத்ன மற்றும் தினேஸ் சந்திமால் ஆகியோர் முறையே 487 மற்றும் 778 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.  அதற்கமைய, தரவரிசையில் இவர்கள் இருவருக்கும் 6 மற்றும் 7 ஆம் இடங்கள் கிடைத்துள்ளன.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்