இலங்கை பாரிய உணவு நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளது: The Japan Times செய்தி

இலங்கை பாரிய உணவு நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளது: The Japan Times செய்தி

இலங்கை பாரிய உணவு நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளது: The Japan Times செய்தி

எழுத்தாளர் Bella Dalima

19 Aug, 2022 | 4:43 pm

Colombo (News 1st) நெல் பயிர்ச்செய்கை குறைவடைந்தமையால், இலங்கை பாரிய உணவு நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளதாக ஜப்பானின் டோக்கியோவைத் தளமாகக் கொண்ட, பழமையானதும் அதிகம் விற்பனை செய்யப்படுவதுமான ஆங்கில பத்திரிகையான The Japan Times செய்தி வெளியிட்டுள்ளது. 

கடந்த வருடங்களில் சிறுபோகத்தில்  இரண்டு மில்லியன் மெட்ரிக் தொன்னாக  இருந்த அறுவடை இனிவரும் காலத்தில் பாதியாக குறைவடையும் என பேராசிரியர் புத்தி மாரம்பேவை மேற்கோள்காட்டி The Japan Times செய்தி குறிப்பிடுகின்றது .

இந்த நெல் பற்றாக்குறை, உணவுப் பாலத்தில் பாரிய இடைவெளியைத் தோற்றுவித்து, ஆரோக்கிய குறைவினை அதிகரிக்கும் எனவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

உரம் மாத்திரமின்றி, எரிபொருள் சிக்கலும் இதில்  தாகம் செலுத்தியுள்ளதாக The Japan Times தெரிவித்துள்ளது. 

அரிசியில் தன்னிறைவு பொருளாதாரம் கொண்ட இலங்கை இன்று அரிசிக்காக ஏனைய நாடுகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்