.webp)
(2)-497557 (1)-465134.jpg)
Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க கொழும்பு - யூனியன் பிளேஸ் பகுதியில் பொலிஸாரால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர்.
ஹைலெவல் வீதியூடாக கொழும்பு கோட்டை பகுதிக்கு செல்வதற்கு மாணவர்கள் முயற்சித்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் வாகன நெரிசலைக் குறைப்பதற்காக பொலிஸார் மாற்று வீதியை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தினர். அத்துடன், கலைந்து செல்லுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
எனினும், மாணவர்கள் தொடர்ந்தும் எதிர்ப்பில் ஈடுபட்டதால் அவர்களைக் கலைப்பதற்கு பொலிஸார் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
