முதல் முறையாக மனிதரிடமிருந்து நாய்க்கு குரங்கு அம்மை தொற்று பரவல்

முதல் முறையாக மனிதரிடமிருந்து நாய்க்கு குரங்கு அம்மை தொற்று பரவல்

முதல் முறையாக மனிதரிடமிருந்து நாய்க்கு குரங்கு அம்மை தொற்று பரவல்

எழுத்தாளர் Bella Dalima

18 Aug, 2022 | 5:26 pm

France: முதல் முறையாக மனிதரிடமிருந்து நாய்க்கு குரங்கு அம்மை தொற்று பரவியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பாரிஸில் குரங்கு அம்மை தொற்றுக்குள்ளான நபர் மூலம் அவரின் வளர்ப்பு நாய்க்கு (Italian Greyhound)
தொற்று பரவியுள்ளதாக  The Lancet மருத்துவ சஞ்சிகையில் தகவல் வௌியிடப்பட்டுள்ளது. 

ஆபிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை தொற்று தற்போது அவுஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 92-இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.

உலகளாவிய ரீதியில் குரங்கு அம்மை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சுகாதார நடவடிக்கைகளை அந்நாட்டு அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

உலகளாவிய ரீதியில்  குரங்கு அம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000-ஐ கடந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குரங்கு அம்மை தொற்று காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

குரங்கு அம்மை தொற்றுக்குள்ளானவர்கள் செல்லப்பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது. 

இதேவேளை, குரங்கு அம்மை தொற்றுக்கான தடுப்பூசி 100 வீதம் பலனளிக்காது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. 

குரங்கு அம்மை வைரஸ் மனித உடலின் துவாரங்கள் ஊடாகவும் தோல் வெடிப்பு, சுவாசப்பாதை, கண்கள், மூக்கு, வாய், உடலின் திரவங்கள் வழியாகவும் மனித உடலுக்குள் செல்லும். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்