கெப்பிட்டல் மகாராஜா குழுமத் தலைவர் சஷி ராஜமகேந்திரன் உள்ளிட்ட குழுவினரிடம் CID வாக்குமூலம் பதிவு

கெப்பிட்டல் மகாராஜா குழுமத் தலைவர் சஷி ராஜமகேந்திரன் உள்ளிட்ட குழுவினரிடம் CID வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

18 Aug, 2022 | 8:12 pm

Colombo (News 1st) ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக அண்மையில் மேலும் சில தரப்பினரிடம்  குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களை  பதிவு செய்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற தெற்காசிய நீச்சல் சம்பியனான ஜூலியன் போலிங், வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் சஷி ராஜமகேந்திரனும் இவர்களில் அடங்குகின்றனர்.

நீச்சல் வீரர் ஜூலியன் போலிங்கிடம் நேற்று சுமார் 8 மணித்தியாலங்கள் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்தது.

வரைறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் சஷி ராஜமகேந்திரன் உள்ளிட்ட குழுவினரிடம்  அண்மையில் 12 மணித்தியாலங்கள் வரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர்  வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்