.webp)
Colombo (News 1st) சமையல் எரிவாயுவின் விலையை குறைப்பதற்கு LAUGFS நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன் பிரகாரம் 12. 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1050 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 5800 ரூபாவாகும்.
5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 420 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், 5 கிலோகிராம் எடையுடைய LAUGFS எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2320 ரூபாவாகும்.
2 கிலோகிராம் LAUGFS சமையல் எரிவாயுவின் புதிய விலை 928 ரூபாவாகும்.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக LAUGFS நிறுவனத்தின் தலைவர் W.K.H. வேகபிட்டிய தெரிவித்தார்.