Laugfs எரிவாயு விலை குறைப்பு

Laugfs எரிவாயு விலை குறைப்பு

Laugfs எரிவாயு விலை குறைப்பு

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2022 | 10:41 pm

Colombo (News 1st) சமையல் எரிவாயுவின் விலையை குறைப்பதற்கு  LAUGFS  நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன் பிரகாரம் 12. 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1050 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 5800 ரூபாவாகும்.

5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 420 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், 5 கிலோகிராம் எடையுடைய LAUGFS எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2320 ரூபாவாகும்.

2 கிலோகிராம் LAUGFS சமையல் எரிவாயுவின் புதிய விலை  928 ரூபாவாகும்.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக LAUGFS நிறுவனத்தின் தலைவர் W.K.H. வேகபிட்டிய தெரிவித்தார். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்