2024 இல் எண்ணெய் விலை குறைவடையக்கூடும்

2024-இல் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைவடையும்: Moody's எதிர்வுகூறல்

by Bella Dalima 17-08-2022 | 4:40 PM

Colombo (News 1st) 2024 ஆம் ஆண்டளவில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைவடையும் என  எதிர்பார்ப்பதாக Moody's தரப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு பீப்பாய்  எண்ணெய் விலை சுமார்  70 டொலராக குறைவடையும் என Moody's தரப்படுத்தல் நிறுவனம் அறிக்கை வௌியிட்டுள்ளது. 

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு மத்தியில் இந்த ஆண்டு ஜூன் மாதம் எண்ணெய் விலை அதிகரித்தது.

இருப்பினும், இந்த மாதம் மீண்டும் எண்ணெய் விலை குறைவடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளே அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.