.webp)
Colombo (News 1st) கண்டி, கதிர்காமம், அநுராதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களை உள்ளடக்கிய அதி சொகுசு உல்லாசப் பிரயாண ரயில் சேவையை வார இறுதி நாட்களில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்திட்டத்திற்காக தனியார் துறை, இலங்கை போக்குவரத்து சபையின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
சொகுசு ரயில்களில் பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டிச்சாலை, கழிவறை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக தனியார் துறையினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
விரைவில் கதிர்காமத்திற்கு பயணிக்கும் வகையில், கொழும்பிலிருந்து பெலியத்தை வரையிலான விசேட ரயில் சேவையை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.