முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அடுத்த வாரத்தில் நாடு திரும்பவுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அடுத்த வாரத்தில் நாடு திரும்பவுள்ளார்

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2022 | 4:21 pm

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டிற்கு திரும்பவுள்ளதாக ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று (17) முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்த வேளையில், அவர் இதனை தெரிவித்துள்ளார். 

MiG விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நீதிமன்ற உத்தரவிற்கமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக உதயங்க வீரதுங்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்