தாய்லாந்தில் 17 இடங்களில் குண்டுத் தாக்குதலும் தீ வைப்பு சம்பவங்களும் பதிவு

தாய்லாந்தில் 17 இடங்களில் குண்டுத் தாக்குதலும் தீ வைப்பு சம்பவங்களும் பதிவு

தாய்லாந்தில் 17 இடங்களில் குண்டுத் தாக்குதலும் தீ வைப்பு சம்பவங்களும் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2022 | 5:19 pm

Thailand: தாய்லாந்தின் தென் பகுதியில் 17 இடங்களில் குண்டுத்தாக்குதல்களும் தீவைப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த தாக்குதல்களில் 7 பேர் காயமடைந்துள்ளனர். 

தாய்லாந்தின் மூன்று மாகாணங்களின் சந்தை தொகுதிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

இதுவரை எந்தவொரு தரப்பினரும் இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்கவில்லை. 

கடந்த இரண்டு தசாப்தங்களாக பிரிவினைவாத பிரச்சினைகள் நிலவி வந்த பகுதிகளில்  இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Pattani, Narathiwat, Yala ஆகிய மாகாணங்களை இலக்கு வைத்தே தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

குறித்த மூன்று பிராந்தியங்களிலும்  2004  ஆம் ஆண்டு முதல் நிலவி வரும் பிரிவினைவாதம் காரணமாக 7300 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். 
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்