சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற 10 பேர் தலைமன்னாரில் கைது

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற 10 பேர் தலைமன்னாரில் கைது

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற 10 பேர் தலைமன்னாரில் கைது

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2022 | 3:55 pm

Colombo (News 1st) சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற 10 பேர் தலைமன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகொன்றில் சென்ற போது இன்று அதிகாலை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

4 ஆண்களும் 4 சிறார்களும் 2 பெண்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார், கிளிநொச்சி, திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இவர்களை மன்னார் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்