இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிலைய செயற்றிட்டங்களுக்கு Adani குழுமத்திற்கு தற்காலிக அனுமதி

இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிலைய செயற்றிட்டங்களுக்கு Adani குழுமத்திற்கு தற்காலிக அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2022 | 5:43 pm

Colombo (News 1st) மன்னார் மற்றும் கிளிநொச்சியின் பூநகரியில் செயற்படுத்தப்படவுள்ள இரண்டு காற்றாலை  மின் உற்பத்தி நிலைய செயற்றிட்டங்களுக்கு  Adani Green Energy நிறுவனத்திற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

286 மெகாவாட் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் மன்னாரிலும் 234 மெகாவாட் மின்னுற்பத்தி நிலையம் பூநகரியிலும் அமைக்கப்படவுள்ளன.

இந்த இரண்டு செயற்றிட்டங்களின் பெறுமதி 500 மில்லியன் அமெரிக்க டொலர் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

நீண்ட காலமாக மின்சார சட்டத்தில் திருத்தம்  ​மேற்கொள்ளப்படாமையினால் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த 46 திட்டங்களில் 21 திட்டங்களுக்கான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

மின்சார சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சு கூறியுள்ளது.

மேலதிகமாக வழங்கப்பட்டுள்ள 26 மின்சார செயற்றிட்டங்களுக்கான அனுமதி தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கையினை எடுக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்