குடியிருப்பில் தீ பரவியதில் 7 வீடுகள் சேதம்

குடியிருப்பில் தீ பரவியதில் 7 வீடுகள் சேதம்

by Staff Writer 16-08-2022 | 10:37 AM

Colombo (News 1st) ஹட்டன் - எபோட்ஸ்லி தோட்டத்திலுள்ள தொழிலாளர் குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளது.

20 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதியிலேயே இன்று(16) காலை 8 மணியளவில் தீ பரவியுள்ளது.

இதன்போது 07 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

வீடுகளிலுள்ள பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஹட்டன் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.