தாய்வான் அதிகாரிகள் மீது தடை விதித்த சீனா

தாய்வான் அதிகாரிகள் மீது தடை விதித்த சீனா

by Staff Writer 16-08-2022 | 9:15 AM

Colombo (News 1st) தாய்வானின் சுதந்திரத்திற்கு ஆதரவளித்தமைக்காக தாய்வான் அதிகாரிகள் 7 பேர் மீது சீனா தடை விதித்துள்ளது.

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி(Nancy Pelosi) தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே தற்போது இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சபாநாயகரின் விஜயம் அந்தத் தீவிலுள்ள சுதந்திர ஆதரவுப் படைகளுக்கு தவறான சமிக்ஞைகளை அனுப்பியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

அத்துடன், தமது நாட்டின் நிலத்தால் பிரிந்த மாகாணமென்ற சீனாவின் உரிமை கோரலையும் தாய்வான் நிராகரித்துள்ளது.