இரத்மலானை கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்

by Staff Writer 16-08-2022 | 12:18 PM

Colombo (News 1st) இரத்மலானை, அல்விஸ் தோட்டம் பகுதி கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. 

கரையொதுங்கியுள்ள சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் கூறினர்.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.

ஏதேனும் அனர்த்தத்தினால் குறித்த நபர் உயிரிழந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.