.webp)
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - மானிப்பாய் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்றிரவு(14) இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மானிப்பாய் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் ஊழியரான இளைஞர் ஒருவர் மீது மூவர் கொண்ட குழுவொன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.