.webp)
Colombo (News 1st) ஆறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐ.நா பாதுகாப்பு சபை மாநாட்டின் 1373 உறுப்புரையின் கீழ் தற்போது கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட 6 அமைப்புகளின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய,
⭕ அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்
⭕ உலக தமிழர் பேரவை
⭕ உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு
⭕ திராவிட ஈழ மக்கள் சம்மேளனம்
⭕ கனேடிய தமிழ் காங்கிரஸ் மற்றும்
⭕ பிரித்தானிய தமிழர் பேரவை ஆகிய அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இந்த அமைப்புகளின் செயற்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புகளுக்கு அமைய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதற்கிணங்க, கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.