.webp)
Colombo (News 1st) ரிதீகம, ஒகொடபொல மஹயாய கால்வாய்க்குள் மூழ்கி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.
மாணவர்கள் சிலர் நீராடுவதற்காக குறித்த கால்வாய்க்கு சென்றிருந்த நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீரில் மூழ்கிய சிறுவன் மீட்கப்பட்டு கோனியாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
பொல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 16 வயதான மாணவரொருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவர்கள் கொகரெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றுக்கு விளையாட்டு போட்டியொன்றுக்காக சென்று மீண்டும் லொறியொன்றில் திரும்பி வரும்போது இந்தக் கால்வாயில் நீராடச் சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.