.webp)
Colombo (News 1st) பல வாகனங்களைப் பதிவு செய்யும் வகையில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு வர்த்தக பதிவு இலக்கத்தின் கீழ் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கையடக்கத்தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்த முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
அதனடிப்படையில், அரச நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு மாத்திரம் இதற்கான அனுமதி வழங்கப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.