ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

நாளையும் நாளை மறுதினமும் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

by Staff Writer 14-08-2022 | 4:58 PM

Colombo (News 1st) நாளை(15) மற்றும் நாளை மறுதினம்(16) ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, குறித்த இரு நாட்களிலும் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

இதனிடையே, சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை அடுத்த வாரத்தின் நடுப்பகுதியில் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் உள்ள மசகு எண்ணெய் பரிசோதிக்கப்பட்டதன் பின்னர் தரையிறக்கப்படுமென கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

அதனடிப்படையில், சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை அளவில் மீள ஆரம்பிக்கப்படுமென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.