5 மாகாணங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

5 மாகாணங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

by Rajalingam Thrisanno 13-08-2022 | 7:06 PM

நாட்டின் ஐந்து  மாகாணங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. 

கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக நுளம்புகள் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார். 

வடக்கு, கிழக்கு, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

நுளம்புகள் பெருகுவதால் தமது சுற்றுச்சூழலை துப்பரவாக வைத்திருக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

டெங்கு ஒழிப்பு ஆலோசனைகளை பின்பற்றாத அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.