.webp)
வார இறுதியில் தனியார் பஸ் சேவை மட்டுப்படுத்தபடுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் 50 வீத பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறினார்.
நேற்றைய (12) தினம் 75 வீதமான தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தபபட்டன.
இன்றும் நாளையும் எரிபொருள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று பஸ் சேவைகளை முன்னெடுக்க முடியும் என எதிர்பார்ப்பதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.